20-03-2026
அன்பின் சுவிசேஷ ஊழியங்கள்
எங்கள் கிராம ஊழியத்திற்காக ஒரு வாகனம் தேவை என்பது எங்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. தொலைதூர கிராமங்களுக்கு சென்று மக்கள் சேவை செய்ய இது மிகவும் உதவியாக இருக்கும்.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையாலும் ஆசீர்வாதத்தாலும், அந்த விருப்பம் இன்று நனவாகியுள்ளது. எங்கள் ஊழியத்திற்காக புதிய ஒரு வானை வாங்க முடிந்துள்ளது.
இந்த பணியில் எங்களை உதவிய உங்கள் அன்பான காணிக்கைகளுக்கும் மனமார்ந்த ஜெபங்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகுந்த உற்சாகமாக இருந்தது.
இது எல்லாம் தேவனுடைய கிருபையாலும் அவருடைய கையினாலேயே நடந்தது.
எல்லா மகிமையும் தேவனுக்கே!